காத்மாண்டு: இந்தியா-நேபாளம் ராணுவம் இடையே 16-வது சூர்ய கிரண் கூட்டுப் பயிற்சி, இந்தியா-நேபாளம் எல்லை அருகேயுள்ள சல்ஜாந்தி என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இருதரப்பிலும் தலா 334 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். வனப் பகுதியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, நிவாரண பணி, மருத்துவ சிகிச்சை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது சிறப்பு அனுபவங்களை இந்த கூட்டு பயிற்சியின் போது பகிர்ந்து கொள்வர்.
இந்தியாவின் பாதுகாப்பு நலனில், நேபாளம் முக்கியமான பகுதி. இருநாடுகள் இடையேயான நீண்ட கால உறவை இரு நாட்டு தலைவர்களும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். நேபாளம், இந்தியாவுடன் 1,850 கி.மீ தூர எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லை சிக்கிம், மேற்குவங்கம், பிஹார், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களை கடந்து செல்கிறது. சரக்கு மற்றும் சேவைகள் போக்குவரத்துக்கு இந்தியாவை, நேபாளம் மிகவும் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago