இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது, "அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் யங்ட்சீ என்ற எல்லைப் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சீன துருப்புகள் நுழைந்ததை அடுத்து அங்கு மோதல் நிகழ்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிச்சையாக மாற்ற முயன்ற சீன ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது. உரிய நேரத்தில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை காரணமாக சீன துருப்புகள், தங்கள் பகுதிக்குச் சென்றுவிட்டன.

எல்லையை பாதுகாக்கும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த மோதலில் இந்திய தரப்பில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ராணுவ வீரர்கள் சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியின் கமாண்டர் மட்டத்தில் கொடி சந்திப்பு நிகழ்ந்தது. இதில், இரு தரப்பிலும் கமாண்டர்கள் பங்கேற்று, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தனர். எல்லையில் அமைதி நிலவ சீன தரப்பும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தூதரக அளவில் கொண்டு செல்லப்படும்" என தெரிவித்தார்.

அமெரிக்கா கருத்து: இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜீன் பீர்ரி, "பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நிலமையை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு தரப்பும் தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

ஐ.நா. வலியுறுத்தல்: இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜரிக், "இது தொடர்பான அறிக்கையைப் பார்த்தோம். பதற்றத்தைத் தணிக்க இருதரப்புக்கும் ஐ.நா அழைப்பு விடுக்கிறது. இந்த பிரச்சினை வளரக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்