தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட தகவலில், "சிலி நாட்டின் தென் கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பகுதிகளில் கிறிஸ்துமஸ் தினத்துக்காக கூடியிருந்த சுமார் 5,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள 21,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் மிக பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிலி அதிபர் மிச்சேல் பாச்லெட் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவசர நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரம் ஏதும் இதுவரை வெளி வரவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago