விமர்சனத்துக்கு உள்ளாகும் ஹாரி - மேகன் ஆவணத் தொடர்

By செய்திப்பிரிவு

நெட்பளிக்ஸில் வெளியாகியுள்ள ஹாரி - மேகன் மார்கல் தொடர்பான ஆவணத் தொடர் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு எதிர்வினைகள் இந்த ஆவணத் தொடருக்கு வந்து கொண்டிருக்கிறது.

பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். எனினும், அரச குடும்பத்தினரும், பிரிட்டன் ஊடகங்களும் கனிவான முகத்தை மேகனுக்கு காட்டவில்லை. பிரிட்டன் ஊடகங்களால் நிறம் சார்ந்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ஊடகங்களால் டயானாவுக்கு என்ன நடந்ததோ, அதுவே மேகனுக்கும், ஹாரிக்கும் நடந்தது. ஒருகட்டத்தில் இதனை ஏற்றுக் கொள்ளாத ஹாரி - மேகன் இணை, இங்கிலாந்து அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கு அரசக் குடும்பமும் ஒப்புதல் வழங்கியது.

பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஹாரியும், மேகனும் கலந்து கொண்டனர். அப்போதும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் நெட்பிளக்ஸில் வெளியாகியுள்ள ஹாரி - மேகன் தொடர்பான ஆவண தொடர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Harry & Meghan என்று பெயரிடப்பட்டுள்ள ஆவணத் தொடரின் முதல் மூன்று எபிசோட்கள் வெளியாகி உள்ளன. அதில் அவர்களின் காதல், திருமணம், அரசக் குடும்ப வாழ்க்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணத் தொடரில் இளவரசர் ஹாரி மேகன் மார்கலின் தந்தை குறித்து கூறியிருப்பதை மேகனின் உடன்பிறந்தவர்கள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து ஜூனியர் மார்க்கல் கூறும்போது, “ மேகனுக்கு குடும்பம் இல்லை, தந்தை இல்லை என்று கூறுவதும்,அவருக்கு அப்பா இல்லை என்று சொல்வதும் அபத்தமானது. நிச்சயம் இது காயப்படுத்துகிறது.” என்றார். அதேபோல் அரசக் குடும்பம் குறித்து மேகன் மார்க்கல் கூறியிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்