காஷ்மீர் எல்லையில் நிலைமை சீரடையும்: பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதி நம்பிக்கை

By ஏஎன்ஐ

காஷ்மீர் எல்லையில் நிலைமை விரைவில் சீரடையும் என்று பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதி காமர் ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பாகிஸ்தானின் 16-வது ராணுவ தளபதியா பஜ்வா பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று அவர் முதல்நாள் அலு வலகப் பணிகளை மேற் கொண்டார்.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங் களுக்கு இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ் தான் தரப்பில் ராணுவ வீரர்கள் உட்பட இதுவரை 57 பேர் உயி ரிழந்துள்ளனர். இதேபோல இந்திய தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள பஜ்வாவுக்கு எல்லை பதற்றம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதுதொடர் பாக பாகிஸ்தானின் அரசு ஊடக மான ஏபிபி-க்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீர் எல்லையில் நிலைமை விரைவில் சீரடையும் என்று தெரிவித்தார். எனினும் எல்லை விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறை கடைப்பிடிக்கப் படும் என்பது குறித்து அவர் விவரித்து கூறவில்லை.

தீவிரவாத பிடியில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பேன் என்றும் பஜ்வா உறுதி அளித்துள் ளார். அதன்படி ஜனநாயக ஆதரவாளரான அவர் புதிய அணுகுமுறைகளைக் கையாளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

காஷ்மீர் விவகாரம்

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா, இஸ்லாமாபாதில் நேற்று கூறியதாவது:

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஐ.நா.சபையின் பொறுப்பு. இந்திய காஷ்மீர் பகுதியில் அந்த நாட்டு அரசு 10 லட்சம் ராணுவ வீரர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அவர் கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்