பெய்ஜிங்: கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்றை சந்தித்துள்ள சீனாவில், தற்போது தினசரி கரோனா தொற்று எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தீவிர கரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கால் வெறுப்படைந்த சீன மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளனர். சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடந்த போராட்டத்துக்குப்பின், சீனாவில் தற்போதுதான் மக்கள் மிகப் பெரியளவில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் தீவிர கரோனா கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு விதிமுறைகளையும் சீன அதிகாரிகள் தளர்த்த தொடங்கியுள்ளனர்.
சீனாவின் குவான்சி மாகாண நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஜோ ஜியாடாங் அளித்துள்ள பேட்டியில், ‘‘ சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிக்க நேரிடும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 கோடியாக அதிகரிக்கும்’’ என கூறியுள்ளார்.
» உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்கத் தயார்: அமெரிக்க அதிபர் பைடன்
‘நேச்சர் மெடிசன்’ என்ற இதழில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அளித்துள்ள பேட்டியில், ‘‘தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சீன அரசு தீவிரப்படுத்தாமல், கரோனா கட்டுப்பாடுகளை நீக்கினால், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பர்’’ என கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago