துருக்கியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டு நிரம்பிய கார் மோதியதில் ராணுவ வீரர்கள் 13 பேர் பலியாகினர். 48 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து துருக்கி ராணுவம் வெளியிட்ட தகவலில் "துருக்கி ராணுவத்தின் கீழ் நிலையில் உள்ள வீரர்கள் இன்று (சனிக்கிழமை) அனுமதி பெற்று உள்ளூரிலுள்ள சந்தைக்கு பொருட்கள் வாங்க பேருந்தில் சென்றனர். அப்போது வெடுகுண்டுகள் நிறைந்த வாகனத்தை ராணுவ வீரர்கள் வந்த பேருந்தின் மீது பயங்கராவாதிகள் மோதச் செய்தனர். இதில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் பலியாகினர். 44 பேர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10-ம் தேதி கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு குர்திஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்த நிலையில் மிண்டும் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் அரசுக்கு எதிராக குர்திஸ் இனத்தவரும், ஜிகாதிஸ்டுகளும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago