“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” - செய்தியாளரிடம் நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்

By செய்திப்பிரிவு

அக்லாந்து: பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா இடையே நடந்த சந்திப்பில் காலநிலை மற்றம், உக்ரைன் போர், ஈரானில் பெண்களின் போராட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது இருவரிடமும் செய்தியாளர் ஒருவர், ”நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று நிறைய நபர்கள் நினைக்கிறார்கள். உங்கள் இருவரிடமும் இருந்து ஒப்பந்தங்களை எதிர்பார்க்க முடியுமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதிலளிக்கும்போது, “எனது முதல் கேள்வி என்னவென்றால், ‘பாரக் ஒபாமாவும் ஜான் கீயும் ஒரே வயதில் உள்ளதால் சந்தித்தார்களா என்று யாராவது கேட்டிருப்பார்களா?” என்றார்.

பின்னர் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பேசும்போது, “நாங்கள் இருவரும் பிரதமர்கள் என்பதால்தான் சந்தித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய உள்ளன. அதைவிட இருவரும் இணைந்து செய்ய வேண்டியது நிறைய உள்ளது” என்றார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலக அளவில் அரசியல் தலைமைகளில் பெண்கள் அமருவதில் கடும் ஏற்றத்தாழ்வு நிகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியிருந்தது. தற்போது 13 நாடுகளில் மட்டுமே பெண்கள் ஆட்சி அதிகாரப் பதவியில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்