உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம்: கின்னஸ் சாதனை படைக்கிறது இலங்கை

By ஏஎஃப்பி

இலங்கையில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள் 12 லட்சம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில், மத நல்லிணக் கத்தை வலியுறுத்தும் வகையில், உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவ, முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா திட்டமிட்டார். அதற்காக 2 லட்சம் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

ஆனால், கொழும்புவில் உள்ள ஆர்ச் பிஷப் மால்கம் ரஞ்சித் ஆட்சேபம் தெரிவித்தார். அந்தப் பணத்தில் ஏழைகளுக்கு உதவிகள் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார். எனினும், பிஷப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசி அந்தத் திட்டத்தை ஆசிர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பின், கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கும் பணி மும்முரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் செயற்கை மரம் நேற்று அதி காரப்பூர்வமாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப் பட்டது.

இதுகுறித்து திட்ட ஒருங் கிணைப்பாளர் மங்களா குணசேகரா நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

உலகில் மிக உயரமாக 100 மீட்டர் (328 அடி) உயரத்துக்கு கிறிஸ்துமஸ் மரம் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், எதிர்ப்பு காரணமாக கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கும் பணி 10 நாட்கள் தாமதமாகி விட்டது. அதனால் 57 மீட்டரில் (187 அடி) மரம் உருவாக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் குவான்ஸோ மாகா ணத்தில் 185 அடி உயரத்துக்கு கிறிஸ்துமஸ் மரம் நிறுவப் பட்டது. அதை விட இந்த மரம் 2 அடி உயரம் அதிகமுள்ளது.

மேலும், கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க 6 லட்சம் எல்இடி மின்விளக்குகள் பயன்படுத்தப்படும். மரத்தின் உச்சியில் 20 அடி உயரமுள்ள நட்சத்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மங்களா குணசேகரா கூறினார்.

கொழும்புவில் நிறுவப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் உலகின் மிக உயரமானது என்ற சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவ னம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்