FIFA WC 2022 | வேல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி: 700 சிறைக் கைதிகளை விடுவிக்கும் ஈரான்

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கந்தாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஈரானின் இந்த வெற்றி, உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை ஈரான் அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது ஈரான் நீதித் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “இந்த நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து 709 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அந்நாட்டு பிரபல நடிகைகள் ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித் துறை கூறுகிறது. ஆனால், ஈரானில் சமீபத்திய போராட்டத்தில் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்