உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் - ஐ.நா. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 73 நாடுகள் பங்கேற்கவில்லை.

கடந்த பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா சர்வதேசசட்ட விதிகளை மீறி செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி ஐ.நா. பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா உட்பட 50 நாடுகள் சார்பில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

தீர்மானம் மீதான விவாதத்தில் உக்ரைன் தூதர் செர்ஜி கெட்ஸ் லெட்லியா கூறும்போது, “சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்பு போரினால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, ஐ.நா. சபையில் முறையிட்டு நிவாரண தொகையை பெற்றது. தற்போது அந்த நாடு சர்வதேச சட்ட விதிகளை மீறி உக்ரைனை ஆக்கிரமித்து தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்து உள்ளன. இதற்கு ரஷ்யா இழப்பீடு அளிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த நாட்டுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் வாசிலி நிபென்ஜியா கூறும்போது, “ஐ.நா. சபை என்பது நீதிமன்றம் கிடையாது. நீதிமன்றத்தில் முறையிடுவது போன்று சில நாடுகள் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. சர்வதேச சட்ட விதிகளை மீீறி செயல்படும் நாடுகள் எங்கள் மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவின் பணத்தின் மூலம் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இது சர்வதேச சட்டவிதிமீறல்’’ என்று குற்றம் சாட்டினார்.

இறுதியில் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 94 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. சீனா, பெலாரஸ், வடகொரியா, ஈரான், ரஷ்யா, சிரியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 73 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்