அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதையடுத்து, ‘பொறுப்பற்ற கத்துக்குட்டி’யின் வெற்றியால் வர்த்தகமும் ஏற்கெனவே தடுமாறு உலகப் பொருளாதாரமும் அச்சுறுத்தலுக்குள்ளானதாக அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
ட்ரம்ப் வெற்றியை அடுத்து அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவு கண்டன. அவரது தேர்தல் பிரச்சார பேச்சுக்களை அவர் நடைமுறைப்படுத்தினாலும் பாதிப்பு ஏற்படும் நடைமுறை படுத்தாவிட்டாலும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றும், அவரது ஆட்சி எப்படி அமையும் என்ற குழப்பம் நிலவுவதால் வர்த்தக அதிபர்கள் கடும் கவலையடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேப்பிடல் இகனாமிக்ஸின் முதன்மை பொருளாதார நிபுணர் பால் ஆஷ்வொர்த் என்பவர் கூறும்போது, “என்ன மாதிரியான அதிபராக ட்ரம்ப் திகழ்வார் என்பதை கணிக்க முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது போல் அரசியல் எதிரிகளை சிறைக்கு அனுப்புவாரா, ஊடகங்களை தண்டிப்பாரா, மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்புவாரா, உலக அளவில் வர்த்தகப் போரை தொடங்குவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அல்லது மிகவும் நிதானமாக செயல்படக்கூடியவராக இருப்பாரா என்பதும் புரியாத புதிராக உள்ளது” என்று அமெரிக்க வர்த்தகர்களின் மனநிலையை பிரதிபலிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதாவது உலகமயமாதல் பொருளாதாரத்தில் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தாங்கள் பின் தங்கி விட்டதாக ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை மிகச்சரியாக ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
அதாவது, பணிகளை அயல்நாட்டுக்கு அவுட் சோர்சிங் செய்யும் நிறுவனங்களின் வர்த்தக ஒப்பந்தத்தை முடக்கி அந்நிறுவனங்களை தண்டிப்பேன் என்றார் ட்ரம்ப். அதே போல் மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளதும் அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தின் கவனத்தை ஈர்த்தது.
சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் ஆக்ரோஷமான அணுகுமுறையை எதிர்பார்க்கலாம் என்று ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டதையடுத்து சியோலைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹா கியான் இயாங் கூறும்போது, “தற்காப்பு பொருளாதார அரசியலை அவர் கையிலெடுத்தால் அது மிக மோசமாகவே போய் முடியும். வர்த்தகத்தில் தொந்தரவு தரும் கொள்கைகளை அவர் வடிவமைத்தால் அது சீனா, கொரியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்” என்றார்.
மற்ற சில பொருளாதார நிபுணர்கள் ட்ரம்பின் கொள்கைகள் நேர்மறையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago