புதுடெல்லி: கம்போடியாவின் ராயல் கம்போடியா ஆயுதப் படைகளுக்கு (ஆர்சிஏஎப்) வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 4 மோப்ப நாய்களை இந்திய ராணுவம் பரிசாக அளித்துள்ளது.
இதுகுறித்து நேற்று டெல்லியில் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, “இந்தியா – கம்போடியா இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த மோப்ப நாய்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. இவை டெல்லியில் இருந்து கடந்த 24-ம் தேதி பயணிகள் விமானம் மூலம் கம்போடியா தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மோப்ப நாய்களை கையாள, ஆர்சிஏஎப் வீரர்கள் சிலருக்கு மீரட் நகரில் கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 23 வரை4 வாரத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.
கம்போடியாவுக்கு கடந்த 2016-ல் 15 மோப்ப நாய்களை இந்தியா பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago