லாகூர் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் படுகொலை முயற்சி ஒன்றில், துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தார். 6 நாட்களுக்கு முன்பு தொடங்கிய அவரது பேரணி லாகூரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா அருகே வசிராபாத்தில் நடந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். நவீத் முகம்மது பஷீர் என்ற அந்த நபர் கைதுக்கு முன் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், "நான் இம்ரான் கானைக் கொல்லத்தான் வந்தேன். அவர் மக்களை தவறாக வழிநடத்துவதால் நான் இதைச் செய்தேன். தவறாக வழிநடத்தியதை என்னால் தாங்க முடியவில்லை என்பதால் அவர் பேரணியைத் தொடங்கிய அன்றே கொலை செய்ய முடிவு எடுத்தேன். நான் தனியாகத் தான் இதைச் செய்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. நானும் யாருடனும் இதை செய்யவில்லை" என்று பேசுகிறார்.
வசிராபாத் போலீஸ் தரப்பில் இவர் குறித்து வெளியாகியுள்ள தகவலில், நவீத் முகம்மது வசிராபாத்திற்கு தனது பைக்கில் பைக்கில் வந்ததாகவும், வாகனத்தை தனது மாமாவின் கடையில் விட்டுச் சென்ற்றுள்ளார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம், இம்ரான் கானை இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் தானியங்கி துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago