அரசியல் மூலமே அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் - ரிஷிக்கு மாமனாரின் அறிவுரை

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கி, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்து உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தவர் எனது மாமனார் நாராயண மூர்த்தி. வணிகத்தின் மூலம்தான் அதிக தாக்கத்தை உருவாக்க முடியும் என்று அப்போது நான் நம்பினேன். ஆனால், அந்த கூற்று தவறு என்பதை அப்போது அவர் விளக்கினார்.

உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த நீ விரும்பினால் அதனை செய்வதற்கான சிறப்பான வழி அரசியல் மூலமாகவே முடியும் என்று நாராயண மூர்த்தி அறிவுரை கூறினார். அப்படி கூறியது மட்டுமின்றி, எப்போதும் என் பின்னால் இருந்து தொடர்ந்து ஊக்கமளித்தார். அதனால்தான் தற்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன். வளர்ச்சியைத் தூண்ட விரும்பினால், நீங்கள் செய்ய விரும்பும் செயலில் புதுமையான நோக்கம் இருக்க வேண்டும். அதாவது புதிய விஷயங்களை உருவாக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் அதிக முதலீடு செய்யும். இவ்வாறு பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE