மெக்சிகோ சிட்டி: தன்பாலின திருமணத்தை மாநிலங்களில் உள்ள சட்டங்கள் மூலம் தடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மெக்சிகோ உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலமாக தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து வந்தன. இந்நிலையில் கெர்ரரோ மாநிலத்தில் தன்பாலின திருமணம் நேற்று முன்தினம் சட்டபூர்வமானது.
இந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்த மெக்சிகோவின் கடைசி மாநிலமான டமாலிபஸ் சட்டப்பேரவையில் தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நேற்றுவாக்கெடுப்பு நடந்தது. இச்சட்டத்துக்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து இங்கும் தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலம் மெக்சிகோ முழுவதும் தன்பாலின திருமணம் தற்போது சட்டபூர்வமாகியுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அர்துரோ ஜல்திவர் ட்விட்டரில், ‘‘ஒட்டுமொத்த நாடும் மிகப் பெரிய வானவில் போல் ஜொலிக்கிறது. கவுரவத்துடன் வாழ்வது அனைத்து மக்களின் உரிமை. காதல், காதல்தான்’’ என குறிப்பிட்டுள்ளார்.
» உலகின் துயர்மிகு கொரில்லாவை மீட்கப் போராடும் ஆர்வலர்கள்
» ஈரானின் சாஹர் தாபர்: அது அறுவை சிகிச்சை அல்ல... ஒப்பனையாம்!
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago