துருக்கியில் கார் குண்டு வெடிப்பு: பெண் பலி; காயம் 30

By கார்டியன்

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் போலீஸ் நிலையத்துக்கு அருகே காரிலிருந்த குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார்; 30 பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு குறித்து மாகாண ஆளுநர் கூறும்போது, "துருக்கியின் டியாபர்கிர் பகுதியில் போலீஸ் நிலையத்துக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் காரிலிருந்த குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று கூறினார்.

முன்னதாக, துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி தொடர்ந்து துருக்கி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 11 பேர் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு பதிலடியாக இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்