கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி - உக்ரைன் மீது 75 ஏவுகணை தாக்குதல்

By செய்திப்பிரிவு

கீவ்: கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா நேற்று 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. எனினும், ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி வெடித்துச் சிதறியது. இத னால் பாலத்தின் ஒரு பகுதி சேத மடைந்தது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் கூறும்போது, “கிரீமியா பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாலத்தை தகர்க்கும் முயற்சி தீவிரவாத செயலுக்கு நிகரானது. உக்ரைன் ராணுவம்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது” என்றார். ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சில நகரங்கள் மீது நேற்று காலையில் ரஷ்ய ராணுவம் 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. கீவ் நகரின் மையப் பகுதியில் உள்ள பல கட்டிடங்களில் இருந்து கரும்புகை வெளியேறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும் 60 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உக்ரைன் ராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜலுனி தனது சமூக வலைதள பக்கத்தில், “தீவிரவாத நாடான ரஷ்யா, தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் தெற்கு, மேற்கில் உள்ள பல நகரங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. காலையில் 75 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் 41 ஏவுகணைகளை எங்கள் வீரர்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர்” என பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “கீவ் உட்பட பல நகரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானின் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசியுள்ளது. எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்கவும்” என்றார்.

கடும் பதிலடி கொடுப்போம்: புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நேற்று பேசியதாவது:
ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் எரிசக்தி, ராணுவம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினோம். எங்கள் நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினால், எங்களுடைய பதில் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடும் பதிலடி கொடுப்போம்: புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நேற்று பேசியதாவது: ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் எரிசக்தி, ராணுவம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினோம். எங்கள் நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினால், எங்களுடைய பதில் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

மேலும்