காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: ஜெர்மனிக்கு இந்தியா கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி கடந்த 7-ம் தேதி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பாக்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஜர்தாரி கூறும்போது, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது.

இது பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டத்தின்படியும் ஐ.நா. தீர்மானங்களின்படியும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாத வரை தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வாய்ப்பில்லை” என்றார்.

பின்னர் அன்னலினா கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா. தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட ஜெர்மனி ஆதரவு அளிக்கும். மேலும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் அரசியல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, “காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இருதரப்பு பிரச்சினை என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இதில் 3-ம் தரப்பு தலையிடுவதற்கு எவ்வித பங்கும் இல்லை. மாறாக நீண்ட காலமாக காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இதனிடையே, இந்தியா மீதான பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இது இந்தியா மீது ஜெர்மனிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதும் ஜெர்மனிக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரேசிலை சேர்க்கஆதரவு தெரிவித்தார். நேட்டோஅமைப்பில் உறுப்பினராகவும் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தபோதிலும், ஜெர்மனியை விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க பைடன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு வங்கி அரசியல்

பாகிஸ்தான் ராணுவ பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகள் மத்தியில், அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவேத் பஜ்வா நேற்று முன்தினம் பேசும்போது, “பயிற்சி முடித்து ராணுவத்தில் சேரும் நீங்கள் ஜனநாயக அமைப்புகளை மதிக்க வேண்டும். நாட்டின் அரசமைப்பு சட்டம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

பஜ்வா தனது உரையின்போது, காஷ்மீர் என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை. ஆனால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமை யிலான பாகிஸ்தான் அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக காஷ்மீர் விவகாரத்தை அவ்வப்போது எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்