சிரியாவில் பள்ளி மீது தாக்குதல்: 7 மாணவர்கள் பலி

By ராய்ட்டர்ஸ்

சிரியாவில் அலெப்போ நகரில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள பள்ளியின் மீது போராட்டக்கரார்கள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் 7 பேர் பலியாகினர். மேலும், அலெப்போ நகரில் குடியிருப்புப் பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

இது குறித்து சிரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "சிரியாவில் அலெப்போ நகரில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள அல்-ஃபர்கான் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் மீது ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் 7 பேர் பலியாகினர். பள்ளியின் வகுப்பறைகள் பல பாதிப்புக்குள்ளாகின.

மேலும், அலெப்போ நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் | படம்: ஏஎஃப்பி

ஒரு வாரத்தில் மட்டும் சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டக்கார்கள் நடத்திய தாக்குதலில் 90 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு இதுவரை 3 லட்சம்பேர் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் பல்முனை உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.

அண்மைக் காலமாக ரஷ்யாவின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. அவரது தலைமையிலான அரசுப் படைகள் அலெப்போ நகரை முற்றுகையிட்டு போராட்டக்கார்களுக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்