நார்வே: 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளியான அலெஸ் பியாலியாட்ஸ்கி 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அலெஸ் பியாலியாட்ஸ்கி யார்?: ரஷ்யன் மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (Russian human rights organisation Memorial) மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Ukrainian human rights organisation Center for Civil Liberties) என இரு அமைப்புகளிலும் முக்கிய பங்காற்றி வருபவர் அலெஸ் பியாலியாட்ஸ்கி.
பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.
பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். சர்வாதிகாரிக்கு இணையான அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கும் நோக்கில் பெலாரசில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தியவர். இதற்காக, வியாஸ்னா என்ற அமைப்பை உருவாக்கியவர்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக 2011 முதல் 2014 வரை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை அடுத்து 2020ல் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணையின்றி இவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், தனது நோக்கத்தில் சமரசமின்றி செயல்பட்டு வருகிறார் அலெஸ் பியாலியாட்ஸ்கி.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago