3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

By செய்திப்பிரிவு

ஸ்டாக்ஹோம்: வேதியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கரோலின் ஆர்.பெர்டோஸி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று கரோலின் ஆர். பெர்டோஸி , மோர்டன் மெல்டல் மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கரோலின்.ஆர்.பெர்டோஸி, உயிர் இயக்கவியலில் மூலக்கூறை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று உயிரினங்களில் பயன்படுத்தத் தொடங்கியவர்.

மேலும், டிஎன்ஏவை வரைபடமாக்குவதற்கும் மிகவும் பொருத்தமான பொருட்களை உருவாக்குவதற்கும், மருந்துகளைக் கண்டறியவும் உயிர் இயக்கவியலில் மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறது. பயோ ஆர்த்தோகனல் உருவாகும் எதிர்வினைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE