உக்ரைனில் உள்ள கருஞ்சிறுத்தை, ஜாகுவாரை மீட்கும் போராட்டத்தில் இந்திய மருத்துவர்

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைனில் பதற்றமிகு போர்ச் சூழலில் குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே தனது செல்லப் பிராணிகளான கருஞ்சிறுத்தையையும், ஜாகுவாரையும் பாரமரித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கிரிகுமார் பாட்டீல் தற்போது அவைகளை கனத்த மனத்துடன் பிரிந்து வந்திருக்கிறார்.

உக்ரைனில் தான் அன்புடன் வளர்த்து வந்த கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இல்லாமல் நாடு திரும்பப் போவதில்லை என்று தீர்க்கமாக இருந்தவர்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவரான கிரிகுமார் பாட்டீல். மேற்கு உக்ரைனில் உள்ள டான்மாஸ் மாகாணத்தில் உள்ள சிறு நகரமான செவரோடோனெட்ஸ்க்கி ஆறு ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் கிரில்குமார், 20 மாதங்களுக்கு முன்னர்தான் கீவ் உயிரியல் பூங்காவிலிருந்து கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இரண்டையும் 35,000 டாலர் (இந்திய மதிப்பில் 26,74,692 ரூபாய்) கொடுத்து வாங்கி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான் உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது.

இதன் காரணமாக தனது செல்லப்பிராணிகளுடன் தொடர்ந்து அங்கயே தங்கி வந்தார். தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளுக்கு உணவளிப்பதற்காக தனது நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு, கார் , பைக் போன்றவற்றை கடந்த சில மாதங்களில் விற்றார். இந்த நிலையில் கிரிகுமாரிடம் இருந்த பணம் முழுவதும் செலவழிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலாந்து சென்று பணம் சம்பாதித்து வரலாம் என்று முடிவு செய்து, தனது வீட்டின் அருகில் தங்கியிருந்தவரிடம் தனது செல்லப் பிராணிகளை பார்த்துகொள்ளும்படி கூறி அதற்கான பணத்தையும் வழங்கி வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் ரஷ்யா ராணுவத்தால் பிடிப்பட்ட கிரிகுமார் உக்ரைன் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் தனது பின்னணியை ரஷ்ய ராணுவத்துடன் கிரிகுமார் தெரிவிக்க அவர்கள் கிரிகுமாரை போலாந்து எல்லையில் விடுவித்துள்ளனர். தற்போது கிரிகுமார் போலந்தில் இருந்துகொண்டு தனது செல்லப் பிராணிகளை மீட்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இது தொடர்பாக உக்ரைனில் இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கையில் வனவிலங்களை போர் பகுதிகளிலிருந்து மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இது கிரிகுமாரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கிரிகுமார் கூறும்போது, “ எப்படியாவது எனது செல்லப் பிராணிகளை மீட்க முயற்சி செய்து வருகிறேன். இந்திய அரசு அவைகளை மீட்டு இந்திய வனப்பகுதிகளில் விட்டாலும் எனக்கு மகிழ்ச்சிதான் . எனக்கு அவைகளை காப்பற்ற வேண்டும்” என்றார்.

40 வயதாகும் கிரிகுமார் பாட்டீல் 2007 ஆம் ஆண்டு, மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றிருக்கிறார். 2014ஆம் ஆண்டு முதல் எலும்பியல் மருத்துவராக இருந்து வரும் கிரிகுமார் பாட்டீல் செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE