மொசாம்பிக் நாட்டின் மேற்கு பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்ததில் 73 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மொசாபிக் அரசு வெளியிட்ட செய்தியில், "மொசாம்பிக்கின் டெடி நகரில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து பெட்ரோலை எடுக்க பொதுமக்கள் முயன்றனர். அப்போது அதிக வெப்பத்தினால் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் பொதுமக்கள் 73 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் குழந்தைகளும் அடங்குவர்.
விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணைக்கு மொசாபிக் அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago