அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், அமெரிக்க தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏபிசி/வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட புதிய கருத்துக்கணிப்பின் முடிவில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியை விட 1% முன்னிலை பெற்றிருக்கிறார்.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் டிரம்ப்புக்கு ஆதரவாக 46% பேரும், ஹிலாரிக்கு ஆதரவாக 45% பேரும் ஆதரவளித்துள்ளனர்.
எஃப்பிஐவிசாரணை
ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார் என டிரம்ப் தொடர்ந்து தேர்தல் களத்தில் பிரச்சரம் செய்து வந்த நிலையில், அமெரிக்க எஃப்பிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன. இதுவே ஹிலாரியின் பின்னடைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
எனினும் எஃப்பிஐ விசாரணை தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஹிலாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க வெள்ளை இனத்தவரிடம் டிரம்ப்புக்கு நாளுக்குநாள் ஆதரவு பெருகிவருவதாகவும், ஆனால் அமெரிக்க கருப்பினத்தவரை பொறுத்தவரை ஹிலாரிக்கே தங்களது ஆதரவை அளித்துள்ளனர் என சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் பல்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தித் தாள்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியே முன்னிலை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago