அலெப்போ நகரில் 10 மணி நேர போர் நிறுத்தம் : ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

By கார்டியன்

சிரியாவின் அலெப்போ நகரில் 10 மணி நேரம் போர் நிறுத்ததுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவலில், "மனிதாபிமான நடவடிக்கையின்படி சிரியாவின் அலெப்போ நகரில் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் வெளியேறுவதற்கு 10 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் மிதவாத எதிர்க் கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளிக்கின்றன.

சிரியாவின் வர்த்தக நகரான அலெப்போ எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நகர் மீது அதிபர் ஆசாத் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா இடையே அண்மையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சமீபத்தில் 7 நாட்கள் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வெளியேற போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்