தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள், “ ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன
போராட்டத்தில் 22 வயதான, ஹனானேன் கியான், என்ற பெண்மணி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன.” என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் ஆதரவு போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் கருப்பு உடை அணிந்து தெஹ்ரான் வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
போராட்ட பின்னணி: ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம். இங்குள்ள சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago