லண்டன்: இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் இந்தியர்கள் மீதும், கோயில்கள் மீதும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை தோற்டித்து இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்துள்ளது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும், அவர்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றையும் குறிவைத்து பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானியர்கள் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகப் பரவின. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், அமைதி நிலவ ஒத்துழைப்பு வழங்குமாறும் லீசெஸ்டர் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், வீடியோக்களை பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள லீசெஸ்டர் போலீசார், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்துக்கான இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியர்களுக்கு எதிராகவும், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், கோயில்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து உயர் அதிகாரிகளிடம் விளக்கி, கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம். தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago