இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 20 பேர் பலி; 39 பேர் மீட்பு

By ஏபி

மலேசியாவில் இருந்து இந்தோனேசிய தொழிலாளர்களை ஏற்றி வந்த படகு, பத்தாம் தீவு அருகே கடலில் கவிழ்ந்து, 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு பகுதியில் இருந்து, இந்தோனேசி யாவின் பத்தாம் தீவு நோக்கி நேற்று அதிகாலை, பயணிகளுடன் படகு ஒன்று புறப்பட்டது. இதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 90 பேர் பயணித்தனர்.

புறப்பட்ட 2 மணி நேரத்தில், பத்தாம் தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது. கன மழை மற்றும் புயல் காற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

பத்தாம் தீவில் இருந்து போலீஸாரும், மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டர், படகுகளுடன் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். பல மணி நேர தேடலில், 39 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இவ்விபத்தில், குறைந்தது 20 பயணிகள் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கி, மீனவர் ஒருவரால் காப்பாற்றப்பட்ட ஹர்யான்டோ என்பவர் கூறும்போது, ‘படகில் உட்காரவே இடமில்லை. மிகவும் நெரிசலாக இருந்தது. திடீரென காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் நிலை குலைந்து படகு கவிழ்ந்துவிட்டது’ என்றார்.

இந்தோனேசிய தீவுகளில் போக்குவரத்துக்கு மக்கள் படகு களையே பெரிதும் சார்ந்துள்ளனர். வானிலை நிலவரங்களை பொருட் படுத்தாமலும், அளவுக்கு மீறி பயணி களை ஏற்றிக்கொண்டும் செல் கின்ற விரைவுப் படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாவது வாடிக்கை யாக உள்ளது. கடந்த, 2009-ம் ஆண்டில் சுலவேசி தீவுக்கு அப்பால் நிகழ்ந்த விபத்தில், 330 பேர் பலி யானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்