லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில், ராணி எலிசபெத், இளவரசி டயானாவின் மாமியார், மருமகள் உறவு குறித்த செய்திகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.
ஆண்ட்ரூ மார்டன் என்ற அரச குடும்ப வரலாற்றுப் பதிவாளர் Her True Story – In Her Own Words, என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, திருமண நாளில் டயானா அணிந்து கொள்ள பிரத்யேக ராஜ குடும்ப கிரீடத்தை ராணி எலிசபெத் அறிவுறுத்தினாராம். ஆனால் அதனை டயானா மறுக்கவே முதல் படியே சிக்கலானதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின்னர் டயானா ஆரம்ப காலங்களில் தனது மாமியார் ராணி எலிசபெத்தை நெருங்கவே மிகவும் அஞ்சியிருக்கிறார். வழக்கமான ராஜ குடும்ப நடைமுறைகளுக்காக அன்றாடம் எலிசபெத்தை சந்திப்பதைத் தாண்டி அவரிடம் டயானா நெருங்கவே இல்லையாம்.
1982ல் பிரின்ஸ் வில்லியம்ஸ் பிறக்கிறார். அப்போதிலிருந்து அரசக் குடும்பத்தில் டயானாவின் பொறுப்புக் கூடியது. அதேபோல் வில்லியம்ஸ் பிறந்த பின்னர் டயானாவுக்கும், எலிசபெத்துக்கும் நெருக்கம் பிறந்தது. ஒருமுறை டயானா தனது பணிப்பெண்ணிடம், இந்த உலகிலேயே தனக்கு சிறந்த மாமியார் கிடைத்திருப்பதாகக் கூறியதாகவும் குறிப்புள்ளது.
» ராணி எலிசபெத் மறைவு: இங்கிலாந்து மன்னராக அரியணை ஏறுகிறார் இளவரசர் சார்லஸ்
» 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு
ஆனால் 5 ஆண்டுகள் கழித்து டயானா வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. சார்லஸுக்கும் அவரது பழைய காதலி கமிலா பார்கர் போவல்ஸுக்கும் இடையே மீண்டும் உறவு ஏற்பட்டது டயானாவுக்கு தெரியவந்தது. அப்போது டயானா ராணியின் உதவியை நாடினார். அவரது ஆதரவு ஆரம்ப நாட்களில் டயானாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல டயானா தனது சோகங்களை தனிமையில் அனுபவிக்க ஆரம்பித்தார். ராணியிடம் இருந்தும் ஆதரவுகள் நின்று போனது. இந்த விஷயத்தில் மருமகளுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் ராணி ஒதுங்கியதாகவும் தகவல்கள் உண்டு,.
இந்தச் சூழலில் 1992-ல் சார்லஸ், டயானா பிரிந்தனர். 1995-ல் ராணி இருவருக்கும் விவாகரத்து செய்ய அழைப்பு விடுத்தார். இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அந்த வேளையில் டயானா அரசக் குடும்பம் பற்றி பகிரங்க பேட்டிகளைக் கொடுக்க அது அவர்களுக்கு சுமையானது. சார்லஸை விவாகரத்த செய்ததற்குப் பின்னர் டயானா 1997 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 2005ல் சார்லஸ், தனது முன்னாள் காதலில் கமிலியாவை திருமணம் செய்தார். ஆனால் இந்தத் திருமண நிகழ்வில் ராணி எலிசபெத்தும், அவரது கணவர் ஃபிலிப்பும் கலந்து கொள்ளவில்லை.
டயானா அரச குடும்பத்தில் இருந்தவரை அவருக்கும் மறைந்த ராணி எலிசபெத்துக்குமான உறவு ஏற்றமும் இறக்கமும் கண்டு சற்றே சிக்கலானதாக இருந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago