பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஹாலிவுட் நடிகர் லியானோர்டோ டி காப்ரியோவும் அணி திரண்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திங்கட்கிழமை நடந்த அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ஒபாமா, லியானோர்டோ டிகாப்ரியோ கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய ஒபாமா, "பருவ நிலை மாற்றத்தைக் குறித்து கண்டிப்பாக பேசவும், அதற்கெதிராக அணி திரள வேண்டிய காலத்தில் உள்ளோம். உலகமயமாக்கலின் விளைவாக இயற்கைப் பேரிடர்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது, பருவ நிலை மாற்றம் குறித்து நம்மை சுய ஆய்வு செய்து கொள்ள" என்றார்.
ஒபாமாவைத் தொடர்ந்து பேசிய ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழலில் ஆர்வமுடையவருமான லியோனார்டோ டி காப்ரியோ, "பருவ நிலை மாற்றம் குறித்த அறிவியல் கருத்தொற்றுமைகள் நிறைய உள்ளன. அதற்கான விவாதம் முடிந்துவிடவில்லை. நீங்கள் பருவ நிலை மாற்றத்தை மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையைப் புறம் தள்ளுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்'' என்றார்.
முன்னதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பருவ நிலை மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அது ஒரு கட்டுக்கதை என்று கூறியிருந்தார்.
டொனால்டு டிரம்புக்கு பதிலளிக்கும் விதமாகவே டிகாப்ரியோவின் பேச்சு அமைந்திருந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் லியானோர்டோ டி காப்ரியோ ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
57 mins ago
உலகம்
11 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago