ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் 31,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு ஆராய்ச்சியாளர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்புக்கூடு இந்தோனேசியாவின் போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கால் நீக்கம் அறுவை சிகிச்சை என்பது இந்த நூற்றாண்டில் கூட மிகவும் கடினமான அறுவை சிகிச்சையாகவே பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் 31,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருக்கு எப்படி காலை நீக்கி அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீவிர ஆய்விலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். மேலும், கால்கள் நீக்கப்பட்ட அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பல ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
இதற்கு முன்னர் உறுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிரான்ஸை சேர்ந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். விஞ்ஞானிகள் கண்டறிந்த அந்த எலும்புக் கூடு 7,000 ஆண்டுகள் பழமையானது. இந்த நிலையில், தற்போது 31,000 ஆண்டுகள் பழமையான உறுப்பு நீக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago