சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. லூடிங் நகரத்தை மையமாகக் கொண்டு பூமிக்கடியில் 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 46 பேர் பலியாகினர். 16 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.

சிச்சுவான் மாகாணத்தில் கரோனா காரணமாக அம்மாகாண அரசு கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் ஊரடங்களில் இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

சிச்சுவான் மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 70,000 பேர் வரை பலியானது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தின்போது பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்