மிகைல் கோர்பசேவ் இறுதி நிகழ்வில் பங்கேற்காத புதின்

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: மிகைல் கோர்பசேவ் இறுதி நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வு காரணமாக மரணம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. பனிப்போர் முடிவுக்கு காரணமாக இருந்த மிகைலின் கோர்பசேவின் மரணம், ரஷ்ய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் ரஷ்யாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், இறுதிச் சடங்கில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கவில்லை. வேலை பளுவின் காரணமாக மிகைல் கோர்பசேவின் இறுதி நிகழ்வில் புதின் கலந்துகொள்ளவில்லை என ரஷ்ய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை மிகைல் கடுமையாக விமர்சித்திருந்த பின்னணியில், மிகைலின் இறுதி நிகழ்வில் புதின் கலந்து கொள்ளாமல் இருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

யார் இந்த மிகைல் கோர்பசேவ்? - 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தன்னுடைய 19 வயதில் சட்டம் பயின்றார். பின் கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றத் தொடங்கினார். மிகைல் கோர்பசேவ் 1985-ஆம் ஆண்டு சோவியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிகைல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் அதிபரானார். படிக்க: புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் - உண்மையான அமைதியின் முகம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்