லண்டன்: பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார்.
அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர்.
» இரண்டு நாட்களில் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்: மருத்துவர் பேட்டி
» 'ஓபிஎஸ் நீக்கம் செல்லும்' - உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஜெயக்குமார் பேட்டி
தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது இன்னும் சில மணி நேரங்களில் வாக்கப்பதிவு முடிவடைய உள்ளது.
இந்தத் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் 2 லட்சம் பேர்வரை வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப் பதிவின்போது கன்சர்வேடிவ் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு இருவர் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, பிரட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்கை பின்னுக்குத் தள்ளி லிஸ் ட்ரஸ் முன்னிலை இருக்கிறார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
லிஸ் ட்ரஸ் வெல்லும் பட்சத்தில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று ரிஷி சுனக் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago