பாலியல் புகார்கள்: கறைகளால் தாக்கப்படுவதாக டிரம்ப் கோபம்

By ஏபி

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனல்டு ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்புக்கு எதிராக பெண்கள் பலர் பாலியல் புகார்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக வடக்கு கரோலினா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ட்ரம்ப், "என் மீது பொய்களையும், கறைகளையும் கொண்டு தொடர்ந்து தாக்குகின்றனர்.

என் மீது புகார் தெரிவித்துள்ள அந்தப் பெண்கள் யாரென்று கூட எனக்குத் தெரியாது. அந்தப் பெண்கள் தங்களுக்குள் போலியான ஒப்பந்தத்தை செய்துகொண்டு என் மீது போலியான புகார்களை தெரிவித்துள்ளனர்'' என்றார்.

முன்னதாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'நியூயார்க் டைம்ஸ்', ட்ரம்புக்கு எதிராக 2 பெண்கள் அளித்த பேட்டியை அண்மையில் வெளியிட்டது.

அதில் ஜெசிகா லீட்ஸ் (70) என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் பயணம் செய்தபோது அருகில் அமர்ந்திருந்த ட்ரம்ப் அத்துமீறி நடந்து கொண்டார். தகாத இடங்களில் தொட்டார் என்றும் மற்றொரு பெண் ரேச்சல் குரூக்ஸ் 2005-ம் ஆண்டில் மேன்ஹாட்டன் ட்ரம்ப் டவரில், ரியல் எஸ்டேட் நிறுவன வரவேற்பாளராக பணியாற்றிய போது ஒருநாள் காலையில் ட்ரம்ப் வலுக்கட்டாயமாக முத்தமிட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

52 mins ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்