உண்ணா நோன்பிருந்து 9 கிலோ எடை குறைத்தேன்: எலான் மஸ்க் பகிர்ந்த ட்வீட்

By செய்திப்பிரிவு

உண்ணா நோன்பிருந்து (Fasting) 9 கிலோ உடல் எடையை குறைத்ததாக உலகின் முதல் பணக்காரர் ஆன எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டர் பயனர் ஒருவருக்கு ரெஸ்பாண்ட் செய்த போது அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ்X நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியுமான மஸ்க், ட்விட்டர் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்படுபவர். தன்னை குறித்து ட்வீட் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரே முன்வந்து பதில் சொல்வார். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

“நல்ல நண்பர் ஒருவரது அறிவுரையை ஏற்று அவ்வப்போது உணவு உண்ணாமல் உண்ணா நோன்பிருக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறேன். ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். ஸீரோ ஃபாஸ்ட் அப்ளிகேஷன் சிறப்பானதாக உள்ளது” என மஸ்க் வரிசையாக பல ட்வீட்கள் மூலம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

நீங்கள் எவ்வளவு உடல் எடை குறைத்து உள்ளீர்கள் என பயனர் ஒருவர் ட்வீட் மூலம் அப்போது கேட்டிருந்தார். அதற்கு மஸ்க் ரிப்ளை செய்துள்ளார். “எனது ஆரோக்கியமற்ற உடல் எடையில் இருந்து சுமார் 9 கிலோ குறைத்துள்ளேன்” என சொல்லியுள்ளார்.

முன்னதாக, மஸ்கின் தந்தை ஒரு பேட்டியில் தன் மகன் மிகவும் மோசமாக உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதோடு உடல் எடையை குறைக்க சில சப்ளிமெண்ட் அவசியம் எனவும் சொல்லி இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE