“தொடர்ந்து ஆடுங்கள் சன்னா...” - பின்லாந்து பிரதமரின் ‘நடன’ சர்ச்சையும் வலுக்கும் விவாதமும்

By இந்து குணசேகர்

ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ தொடர்பான தனது முழு விளக்கத்தையும் சன்னா மரின் வழங்கினார். தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக போதை மருந்து சோதனையையும் சன்னா மரின் செய்துகொண்டார். முடிவில் சன்னா மரின் அந்த பார்ட்டி நிகழ்வில் எந்தப் போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.

என்ன நடந்தது? - சன்னா மரின் (36), 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்த நிலையில், வார இறுதியில் எந்தப் பணியும் இல்லாத காரணத்தால் சன்னாவும் அவரது நண்பர்களும் பார்ட்டி ஒன்றில் பங்கேற்று உற்சாகமாக பாடி, நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவைக் கண்ட பலரும் சன்னா போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தினர்.

குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாட்டின் பிரதமரே இப்படி நடனம் ஆடுவதா என எதிர்கட்சிகள், மத குருக்கள் என பலரும் கடுமையாக சன்னாவை விமர்சித்தனர். தான் இந்த பார்ட்டியில் போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை என முன்னரே சன்னா விளக்கம் அளித்தார். ஆனால், அவரது விளக்கம் அவரை விமர்சிப்பவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனைத் தொடர்ந்தே சன்னா போதைப் பொருள் சோதனை செய்துகொண்டார். அந்த முடிவும் சன்னா கூறியது போலவே இருந்தது.

இந்த விமர்சனங்கள் சன்னாவை உளவியல் ரீதியாக வலுவிழக்கச் செய்ததாக சன்னாவின் நண்பர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்த சன்னா மரின் கூறியது, “நானும் மனுஷிதான். என்னுடைய கடினமான நாட்களில் எனக்கும் சில புத்துணர்வு தேவைப்படுகிறது. இம்மாதிரியான புகைப்படங்கள் பொதுவெளியில் வருவதை நானும் விரும்பவில்லை. நீங்களும் விரும்பமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இது தனி நபர் விஷயம். அதுவே வாழ்க்கையும் கூட..

நான் ஒருநாள் விடாமல் பணி செய்து வருகிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன்” என கண்ணீருடன் தெரிவித்தார். சன்னாவுக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு இருப்பினும், அடுத்த வருடம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் இது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சன்னா மரின் அங்கம் வகிக்கும் கட்சியான சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் செயலாளர் மைக்கேல் ஜங்னர் தெரிவித்திருக்கிறார்.

போர்களை தொடுக்கும் உலகத் தலைவர்கள் மத்தியில் சன்னா செய்ததில் என்ன தவறு இருக்கிறது? பிரதமர் நடனம் ஆடக் கூடாதா? - இப்படி பலரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஆடுங்கள் சன்னா... - அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஹிலாரி க்ளிண்டன் தான் நடனம் ஆடும் புகைப்படத்தை பதிவிட்டு “தொடர்ந்து நடனம் ஆடுங்கள் சன்னா...” என்று ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சன்னா மரினுக்கு ஆதரவாக பின்லாந்து இளம் பெண்கள் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்