வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தத் தவறினால் சீனாவைச் சுற்றிலும் அமெரிக்கா ஏவுகணைகளை நிறுத்தும் என ஹிலாரி கிளின்டன் 3 ஆண்டுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் ஹிலாரி. இந்நிலையில், இவரது தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரின் தனிப்பட்ட இ-மெயிலில் ஊடுருவிய விக்கிலீக்ஸ், அதிலிருந்து பிறருக்கு அனுப்பப்பட்ட மெயிலிலிருந்து சில ஆவணங்களை திரட்டி உள்ளது.
அதில், ஹிலாரி கடந்த 2013-ல் தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய உரையாடலின் ஒரு பகுதியும் அடங்கி உள்ளது. அதில், தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது சீனாவுடன் பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கை கடைபிடித்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் வடகொரியா ஏவுகணை களை உற்பத்தி செய்து வருவதால், அமெரிக்கா மற்றும் தோழமை நாடுகளுக்கு மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை சீனா கட்டுப்படுத்த வேண்டும்.
தவறினால் நான் அதிபரானால் சீனாவைச் சுற்றி எவுகணைகள் நிறுத்தப்படும் என பேசியுள்ளார். இந்த தகவலை வெளியிடக்கூடாது என ஹிலாரி கூறியிருந்த நிலையில், விக்கிலீக்ஸ் வெளி யிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
55 mins ago
உலகம்
11 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago