இஸ்லாமாபாத்: போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கிய ஜேஎஃப்-17 ரக போர் விமானங்களுக்கான இன்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு பழுதாகின்றன.
காஷ்மீரின் பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லை தாண்டி இந்தியா ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்தனர். அதன்பின்னர் சீனாவின் ஜேஎஃப்-17 ரக போர் விமானங்களை இந்திய பகுதிக்கு பாகிஸ்தான் அனுப்பியது. அவற்றை இந்திய விமானப் படை விரட்டி அடித்தது.
» பிரேசிலின் 200-வது சுதந்திர தினம்: போர்ச்சுக்கல்லில் இருந்து வந்த முதல் மன்னரின் இதயம்
» “ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் மறுபிறவி எடுத்துள்ளது” - ஜெலன்ஸ்கி
இந்நிலையில், சீன விமானத்தின் இன்ஜின்கள் பழுது பார்த்தல் பராமரித்தல் போன்ற சேவைகளுக்கு அந்நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், நேரடியாக ஜேஎஃப் 17 ரக போர் விமானங்களுக்கான இன்ஜின்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த விமானங்களுக்கான ஆர்டி-93 ரக இன்ஜின்களை, ரஷ்யாவின் கில்மோவ் நிறுவனத்திடம் பாகிஸ்தான் வாங்க உள்ளது. அந்த நிறுவனமும் இன்ஜின்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆர்டி-93 இன்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான கருவிகளை அளிக்கவும், பராமரிப்புப் பணிகளை செய்யவும் ரஷ்யாவின் கில்மோவ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago