மனச்சிதைவு நோய் பாதித்தவருக்கு பாக். உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததால் சர்ச்சை

By ராய்ட்டர்ஸ்

மனச்சிதைவு (schizophrenia) என்ற ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் இம்தாத் அலி (50). இவருக்கு மனச்சிதைவு (schizophrenia) மனநோய் ஏற்பட்டிருப்பதாக கடந்த 2012-ம் ஆண்டு அந்நாட்டு அரசு மருத்துவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் அளித்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே 2001-ம் ஆண்டு மதகுரு ஒருவரை கொலை செய்ததாக இம்தாத் அலி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம் நிரூபணமாகிவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இம்தாத் அலிக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஆனால், அலியின் வழக்கறிஞர் தரப்போ, "அலி தற்போது இருக்கும் மனநிலையில் அவர் செய்த குற்றத்தையோ, இல்லை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையோ உணர்ந்துகொள்ளும் நிலையில் இல்லை. இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது ஐ.நா.வுடன் பாகிஸ்தான் ஏற்படுத்திக் கொண்ட சிவில், அரசியல் உரிமைகள் சார்ந்த உடன்படிக்கையை மீறுவதாக இருக்கும்" என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்

இருப்பினும், பாகிஸ்தான் தலைமை நீதிபதி அன்வர் ஜாகிர் ஜமாலி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, "மனச்சிதைவு ஒரு நிரந்தர மனநோய் அல்ல. இந்நோய் கொண்டவர் அதிலிருந்து குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இம்தாத் அலியை மனநோயாளியாக பாவிக்க முடியாது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய தீர்ப்பை மேற்கோள் காட்டி..

இம்தாத் அலிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகள் அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு மனச்சிதைவு நோய் தொடர்பாக குறிப்பிட்டுள்ள விளக்கத்தையும், இதேபோன்ற நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு 1988-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனையையும் மேற்கோள்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கண்டனம்:

இம்தாத் அலிக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை மிகவும் மூர்க்கத்தனமானது என பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மனச்சிதைவு நோய் மனநோயே அல்ல என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. இது மருத்துவத்துறைக்கே அவமானம் எனவும் தெரிவித்துள்ளது.

425 பேருக்கு தண்டனை:

கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவரில் ஒரு பள்ளியில் தாலிபன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்நாட்டில் மீண்டும் மரண தண்டனை அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து இதுவரை 425 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரிசையில், இம்தாத் அலிக்கு வரும் புதன்கிழமைக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

50 mins ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்