கனடாவில் பேசப்படும் மொழிகளில் பஞ்சாபிக்கு 4-வது இடம்

By செய்திப்பிரிவு

ஒட்டாவா: கனடாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் பஞ்சாபி 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 சதவீதம் பஞ்சாபி மொழி வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 3.8 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஏராளமான வெளிநாட்டினரும் அடங்குவர். இதில் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம், பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். இதற்கு அடுத்து 3-வது இடத்தில் சீனாவின் மேண்டரின் மொழி உள்ளது. அந்த மொழியை 5.3 லட்சம் பேர் பேசுகின்றனர்.

இந்தியாவின் பஞ்சாபி மொழிக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. சுமார் 5.2 லட்சம் மக்கள் அந்த மொழியை பேசுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 49 சதவீதம் அளவுக்கு பஞ்சாபி மொழி வளர்ச்சி அடைந் திருக்கிறது. இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறும் பஞ்சாபியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் பஞ்சாபி மொழி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சீனாவின் கேன்டனீஸ், ஸ்பானிஷ், அரபிக், பிலிப்பைன்ஸ் நாட்டின் டகாலோக், பெர்சிய மொழிகள், உருது, ரஷ்ய மொழி, கொரிய மொழி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவை சேர்ந்த குஜராத்தி, இந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளும் கணிசமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கனடா அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE