வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

By ஏஎஃப்பி

தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள ராணுவ தளத்தை தாக்கும் திறன் வாய்ந்த முசுதன் ஏவுகணையை, வடகொரியாவின் குசாங் நகருக்கு அருகே உள்ள விமானப்படை தளத்திலிருந்து சோதனை முறையில் ஏவியது. வடகொரியாவின் இந்தச் சோதனை தோல்வி அடைந்ததாக தென்கொரிய ராணுவம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் வடகொரியாவின் இந்தச் செயலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் 'வடகொரியாவின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது.

கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி உணவு, மருந்து பொருட்களைத் தவிர்த்து அந்த நாட்டுக்கு வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்