இத்தாலியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

By ஏபி

இத்தாலியின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை 5.4 மற்றும் 6.1 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவாகியுள்ளன.

இவ்விரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்டது. சில இடங்களில் வீடுகள், தேவாலயங்கள் சரிந்தன. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மேயர்கள் கூறும்போது, "அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் இத்தாலியின் மத்தியப் பகுதிகளில் சில வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 247 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

52 mins ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்