மெல்போர்ன்: உலகில் அழிந்த விலங்கினங்களில் ஒன்றான டாஸ்மேனியன் புலியை ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது டாஸ்மேனியன் புலி. இவை தைலசின் (ஓநாய் போன்ற விலங்கு) என்றும் அழைக்கபடுகின்றன. இவை 1936-ஆம் ஆண்டு வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், பருவநிலைச் சூழல் காரணமாக இந்த வகை இனங்கள் அழித்தன.
உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி, டாஸ்மேனியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் 1936-ஆம் ஆண்டு வரை வாழ்ந்து மடிந்தது. கடைசியாக வாழ்ந்த டாஸ்மேனியன் புலியின் பெயர் பெஞ்சமின்.
இந்த நிலையில், டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
» நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் பேசவுள்ளேன்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
» ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை செல்லாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
இதுகுறித்து மெல்போர்ன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, “இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 mins ago
உலகம்
11 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago