கலிபோர்னியா: தமிழகத்தைப் போல அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவுத் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. யுனிவர்சல் மீல்ஸ் என்று இத்திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களுக்கு பள்ளியில் இலவச உணவை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்துக்கான மசோதா மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உணவுச் செலவுகள் அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் தொற்றுநோய் போன்றவற்றால் மாகாணத்தில் பசியால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகமானதாக சொல்லப்பட்டது. ஃபீடிங் அமெரிக்கா என்ற அமைப்பின் தரவின்படி, 2021 ஆம் ஆண்டில் 13 மில்லியன் குழந்தைகள் அதாவது, ஆறில் ஒரு குழந்தை உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவற்றை ஆராய்ந்த கலிபோர்னியா மாகாண அரசு ஊட்டச்சத்து குறைபாட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படகூடாது என்பதற்காக இலவச உணவுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, காலை, மாலை என இருவேளைகளில் சத்தான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கலிபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. மாகாண அரசு தொடங்கினாலும், ஸ்பான்சர்களின் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago