சோவியத் யூனியன் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

By ஏபி

சோவியத் யூனியன் வீழ்ச்சியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சீன கம்யூனிச கட்சி வலியுறுத்தி உள்ளது.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை அமலில் உள்ளது. அந்த நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது மத்திய கமிட்டியின் 6-வது அமர்வு குழு கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:

கடந்த 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தது. அதுபோன்ற வீழ்ச்சி சீனாவுக்கும் ஏற்படக்கூடாது. சோவியத் யூனியன் வீழ்ச்சியில் இருந்து சீனா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் ஊழல் புரையோடியிருப்பது கவலையளிக்கிறது. அதிபர் ஜி ஜின்பிங் பதவியேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 10 லட்சம் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி விதிகளின்படி ஜி ஜின்பிங் 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். அதன்படி வரும் 2022-ல் அவரது பதவிக் காலம் நிறைவடைகிறது. ஆனால் விதிமுறையை தளர்த்தி 2022-க்கு பிறகும் பதவியில் நீடிக்க ஜி ஜின்பிங் காய்களை நகர்த்தி வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்