நான்சி பெலோசியின் வருகை பொறுப்பற்றது, பகுத்தறிவற்றது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில், “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவான் உடன் நாங்கள் நிற்கிறோம்” என்று நான்சி தெரிவித்திருந்தார்.
நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
» அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு
» அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
நான்சியின் வருகை காரணமாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவைச் சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் நான்சி வருகை குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாங் யீ ஆசிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டத்தில் பேசும்போது, “அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சியின் பயணம் பொறுப்பற்றது, பகுத்தறிவற்றது.
சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் அவசியமான மற்றும் சரியான நேரத்திற்கான தற்காப்பு எதிர் நடவடிக்கைகள். சீன தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது ” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago