வாஷிங்டனில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் காயம்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”வாஷிங்டனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைந்துச் செல்லப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை குறித்த எந்த தகவலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு இன்று நேர்ந்தது குறித்து நான் கோவம் கொள்கிறேன்.அவர்களுக்கு இது நடத்திருக்கக் கூடாது. நம்முடன் வாழ்பவர்களில் சிலர் தங்கள் மனிதாபிமானத்தை இழந்து விடுகிறார்கள்” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபுளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதங்கள் வாங்கும் வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE