டோக்கியோ: ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு முக்கிய பிரமுகர்கள் நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தலும் நடைபெற்றது. இன்று முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ (67)கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார்.
இதையடுத்து ஷின்சோ அபேஉடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோகிஷிடா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று அபே உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடா ளுமன்ற மேலவைக்கு திட்டமிட்ட படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சுதந்திர ஜன நாயக கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புஇருப்பதாக கருத்து கணிப்புகள்தெரிவிக்கின்றன. வாக்குகள்எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இன்று இறுதி முடிவு வெளியாக உள்ளது.
» பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: கூடுதலாக 1,000 போலீஸார்
» 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | ஸ்பெயினுக்கு எதிராக தோல்வி; காலிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago